வியாழன், 20 பிப்ரவரி, 2014

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை ஒரு வெட்கக்கேடு



பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை கொண்டாடும் இந்தியத்தமிழர்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.


குஸ்புக்கு கோவில் கட்டிய இனத்திடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மிஞ்சிப்போனால் அஜித் விஜய் பேனர்களுக்கு பாலாபிசேபம் அல்லது லீவு போட்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் மாட்ச் அல்லது நாள் முழுவதும் சீரியல் அல்லது கருணாநிதியை திட்டி விட்டு ஜெயலலிதாவிடம் பம்மல் அல்லது எதற்கென்றே தெரியாமல் எதுவுமே புரியாமல் கூட்டத்தோடு கோஷமிடுவது இவை தானே நம் வீரத்தமிழர்களின் அடையாளம்.



நாம் இந்தியர்கள், கொடூரமாய் கொல்லப்பட்டது நம் பிரதமர் என்ற உணர்வே இல்லாத பதர்களுக்கு மூளை என்று ஒன்று உண்டா என்பது வெறும் கேள்விக்குறி.

ஈழத்தமிழர் மேல் பரிவு பாசத்தையும் கொலையாளிகள் விடுதலை ஆதரவையும் ஒன்றென்று நினைத்து ஆர்ப்பரிப்பவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக